குடும்ப தலைவி பெயரில் வீடு: மகளிர் தினத்தில் ஸ்டாலின் உறுதி…
சென்னை ‘நகர்ப்புற மேம்பாட்டு வாரிய வீடுகள், குடும்ப தலைவியர் பெயரில் வழங்கப்படும்,” என, மகளிர் தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மகளிருக்கு இந்த ஆண்டு 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். மகளிர் மேம்பாடு அடைந்தால் தான் குடும்பம் மேம்பாடு அடையும்; சமூகம் மேம்பாடு அடையும். குடிசை மாற்று வாரியத்தை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என மாற்றினோம். அந்த வாரியத்தின் வீடுகள், இனி குடும்ப தலைவியின் பெயரில் தான் வழங்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.