எஸ்.ஐ., பணிக்கு ஏப்., 7 வரை விண்ணப்பிக்கலாம்…
சென்னை : ‘காவல் துறைக்கு புதிதாக, 444 எஸ்.ஐ.,க்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதற்கு ஏப்., 7 வரை விண்ணப்பிக் கலாம்’ என, அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் பதிவு நேற்று துவங்கியது. விண்ணப்ப பதிவுக்கு ஏப்ரல், 7ம் தேதி கடைசி நாள். தகுதியான நபர்களுக்கு எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதி மற்றும் நேர்முக தேர்வுகள் நடக்க உள்ளன. முதன் முறையாக, 100 மதிப்பெண்களுக்கு தமிழ்மொழி தகுதி தேர்வு நடக்க உள்ளது. இதில், விண்ணப்பத்தாரர்கள் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.