இந்தியா மீது தடைவிதிப்பது மடத்தனம்; அமெரிக்க எம்.பி., பாய்ச்சல்

நட்பு நாடான இந்தியா மீது, அமெரிக்கா பொருளாதார தடை விதிப்பது மிக மடத்தனமான செயலாக இருக்கும்,” என, அந்நாட்டு எம்.பி., டெட் குருஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரசு, சர்வதேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான ராணுவ தளவாடங்களை விற்பனை செய்யும் நாடுகள், வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கிறது. இதன்படி ரஷ்யாவிடம் ‘எஸ்-400’ ஏவுகணை சாதனத்தை வாங்கிய துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. அதுபோல, ரஷ்யாவிடம், 35 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, ஐந்து ‘எஸ்-400’ ஏவுகணை சாதனங்களை வாங்கும் இந்தியா மீதும் பொருளாதார தடை விதிப்பது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் அடங்கிய வெளியுறவு குழுவின் கூட்டம் நடந்தது. இதில் குடியரசு கட்சி எம்.பி., டெட் குருஸ் பேசியதாவது: இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க, அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா மீது தடை விதிப்பது மிக மடத்தனமான செயலாக இருக்கும். அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற ஓராண்டில், இந்தியா உடனான நல்லுறவு சீர்குலைந்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.