9 பேருக்காக ஓர் அரசு பள்ளி… மூடும் அச்சத்தில் மாணவர்கள்!!!
செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் கிராமம், படவேட்டம்மன் நகரில் அரசு ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையான மாணவர்கள் பயில்கின்றனர்.ஒன்றாம் வகுப்பில் இரண்டு மாணவர்கள், இரண்டாம் வகுப்பில் ஒரு மாணவர், மூன்றாம் வகுப்பில் இரண்டு மாணவர்கள், நான்காம் வகுப்பில் இரண்டு மாணவர்கள், ஐந்தாம் வகுப்பில் இரண்டு பேர் என மொத்தம் ஒன்பது மாணவர்கள் மட்டும் படித்து வருகின்றனர். .தலைமையாசிரியர் சரஸ்வதி கூறியதாவது:நான் புதிதாக பள்ளியில் நேற்று முன்தினம் தான் பொறுப்பேற்று உள்ளேன். நான் பெற்றோர்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, கிராமத்தின் முக்கிய பிரமுகர்களை சந்தித்து, பள்ளியில் கூடுதலாக மாணவர்களைச் சேர்க்க, தீவிர முயற்சி எடுப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ்