3 தமிழக பெண்களுக்கு ‘பெண் சக்தி’ விருது- ஜனாதிபதி இன்று வழங்குகிறார்!!!

 Tweet அ-அ+

டாக்டர் தாரா ரங்கசாமி சென்னையில் உள்ள ஸ்கி சோப்ரினியா ஆராய்ச்சி அறக்கட்டளையின் இணை நிறுவனர் மற்றும் துணைத் தலைவராக உள்ளார். இந்த விருதை சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8-ந்தேதி டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி வழங்கி வருகிறார். தமிழகத்தை சேர்ந்த 3 பெண்களுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த தோடா எம்பிராய்டரி கைவினைஞர்களான ஜெயமுத்து, தேஜம்மா ஆகியோருக்கு 2020-ம் ஆண்டுக்கான பெண் சக்தி விருதும், மனநல மருத்துவரும், ஆராய்ச்சியாளருமான டாக்டர் தாரா ரங்கசாமிக்கு 2021-ம் ஆண்டுக்கான பெண் சக்தி விருதும் வழங்கப்பட்டது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை