மான்டெரே டென்னிஸ் லெய்லா மீண்டும் சாம்பியன்!

மெக்சிகோவில் நடைபெற்ற மான்டெரே ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், கனடா வீராங்கனை லெய்லா பெர்னாண்டஸ் மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி கோப்பையை தக்கவைத்துக் கொண்டார். இறுதிப் போட்டியில் கொலம்பியாவின் கமிலா ஒசாரியோவுடன் (20 வயது, 35வது ரேங்க்) மோதிய நடப்பு சாம்பியன் லெய்லா (19 வயது, 21வது ரேங்க்) 6-7 (5-7), 6-4, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் 2 மணி, 52 நிமிடம் போராடி வென்றார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் அவர் 5 முறை கமிலாவிடம் இருந்து சாம்பியன்ஷிப் பாயின்ட்டை பறித்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டும் இத்தொடரில் லெய்லா பட்டம் வென்றிருந்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.