மதுரை மத்திய சிறை ஊழல் வழக்கு – மனுத்தாக்கல் செய்ய ஐகோர்ட் அறிவுறுத்தல்….
சென்னை ஐகோர்ட் வழக்கறிஞரும், சிறைக்கைதிகள் உரிமை மைய இயக்குனருமான புகழேந்தி, ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அவரது மனுவில், மதுரை மத்திய சிறையில் கைதிகளால் தயாரிக்கப்பட்ட மருத்துவ பொருட்கள், எழுது பொருட்கள் ஆகியவற்றை அரசு அலுவலகங்களுக்கும், மருத்துவமனைகளுக்கும், நீதிமன்றங்களுக்கும் அனுப்பப்பட்டதாக போலி கணக்கு காண்பிக்கப்பட்டு ஊழல் செய்யப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த மனு இன்று சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரதன் சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இது போன்ற ஊழல் புகார்கள் தொடர்பாக குற்ற விசாரணை சட்டப்படி சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தான் விசாரணை கோரி மனுத்தாக்கல் செய்ய முடியும் என்று தெரிவித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்ய அனுமதியளித்து வழக்கை முடித்து வைத்தனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.