பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 459 ரன்களுக்கு ஆல் அவுட்!!

ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்கு 476 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. 

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 4 -வது நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 449 ரன்கள் குவித்தது. ஸ்டார்க் 12 ரன்களுடனும் கேப்டன் கம்மின்ஸ் 4 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்த நிலையில்,  கடைசி நாளான இன்று தொடர்ந்து விளையாடினர். வந்த வேகத்தில் இருவரும் நடையை கட்டினர். கடைசிநாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 140.1 ஓவர்களில் 459 ரன்கள் குவித்துள்ளது. பாகிஸ்தான் தரப்பில் நவ்மான் அலி அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானை விட 17 ரன்கள் பின்தங்கியுள்ளது. இரு அணிகளும் இன்னும் தலா ஒரு இன்னிங்ஸ் விளையாடினால் மட்டுமே ஆட்டத்தில் முடிவு எட்டும் நிலையில், இன்று கடைசி நாள் என்பதால், ஆட்டம் டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.