பழைய ஓய்வூதிய திட்டமா? பள்ளி கல்வி துறை கைவிரிப்பு!!!

பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வருமா என்பது எங்களுக்கு தெரியாது’ என ஆசிரியர் சங்கத்தினரிடம் பள்ளி கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் 2003 முதல் அமலில் உள்ளது. இதில் குறைந்த பலனே உள்ளதால் அதை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர வேண்டும் என ஆசிரியர் சங்கத்தினர் போராடி வருகின்றனர். அந்த மனுவுக்கு அளித்துள்ள பதில் கடிதத்தில் ‘பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படுமா என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு. வேறு எதுவும் எங்களுக்கு தெரியாது’ என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.