பல கோடி மதிப்பு ‘ரிசர்வ் சைட்’ ஆக்கிரமிப்பு!!

வடவள்ளி பேரூராட்சியாக இருந்தபோது, வடவள்ளி-தொண்டாமுத்துார் ரோட்டில் ஒரு ஏக்கர் 25 சென்ட் பரப்பிலான இடம், லே-அவுட் போட்டு விற்கப்பட்டுள்ளது. இதில் 10.12 சென்ட் நிலம், பொது ஒதுக்கீட்டு இடமாகக் காட்டப்பட்டு, நகர ஊரமைப்புத்துறையிடம் திட்ட அனுமதி பெறப்பட்டுள்ளது. அந்த இடத்தில் பூங்கா, சமுதாயக்கூடம் என எந்த மேம்பாட்டுப் பணியையும் பேரூராட்சி நிர்வாகம் செய்யவில்லை. இந்நிலையில் அந்த இடம், 16 ஆண்டுகளுக்கு முன் முறைகேடாக விற்கப்பட்டுள்ளது. ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் இடத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கடைகளைக் கட்டி வாடகைக்கு விட்டுள்ளவர்கள் தரப்பில், கோர்ட்டில் தடையுத்தரவு வாங்கியதுதான் காரணமென்று மாநகராட்சி நகரமைப்புப் பிரிவினர் கூறுகின்றனர். அந்த தடையுத்தரவு, கடந்த நவம்பரிலேயே முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த இடத்தை மீட்க சட்டப்படி போராடி மீட்க வேண்டியது மாநகராட்சியின் கடமை.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.