தேனி நகராட்சி தலைவர் ராஜினாமா செய்ய மறுப்பு….


தேனி: காங்.,க்கு ஒதுக்கப்பட்ட தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவர் பதவியை தற்போது பொறுப்பு ஏற்றவர் ராஜினாமா செய்ய மறுத்தால் கட்சியை விட்டு நீக்கப்படுவார் என தி.மு.க., வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் எச்சரித்தார். ‘தலைவர் பதவியை ராஜினாமா செய்தால், துணை தலைவர் பதவி வழங்க வேண்டும்’ என நகர பொறுப்பாளர் பாலமுருகன் கோரினார். அதற்கு நிர்வாகிகள் உறுதியளிக்கவில்லை. பதவியை ராஜினாமா செய்ய நேற்று காலை 11:00 மணி வரை தங்க தமிழ்செல்வன் கெடு விதித்தார். அவரது வருகைக்காக அலுவலகம் முன் காத்திருந்தார். ஆனால் ரேணுப்பிரியா, பாலமுருகன் வரவில்லை.தங்கதமிழ்செல்வன் கூறுகையில், ”தலைவர் பதவியை ராஜினாமா செய்யாததால் இருவரும் கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவர். செல்வம் நகராட்சி துணை தலைவராக தொடர்வார்,” என்றார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.