சென்னை மேயர் பிரியாவின் அடுத்த திட்டம் என்ன???

சென்னை மாநகராட்சியின் புதிய மேயராக பதவியேற்றுள்ள பிரியா ராஜன் மக்களின் வளர்ச்சிக்காக செய்யப்போகும் பணி என்பது குறித்து அனைவரும் எதிர்ப்பார்த்து வரும் நிலையில், தான் செய்யப்போகும் திட்டம் குறித்து பிரியா ராஜன் பேசியுள்ளார். ஆசிரியராக விரும்பியதாக மேயர் பிரியா ராஜன் தகவல். வட சென்னை மக்களின் வளர்ச்சிக்கு கூடுதல் கவனம் – மேயர் பிரியா ராஜன். மூன்றாவது பெண் மேயர், முதல் தலித் சமூக பெண் மேயர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான பிரியா ராஜன் தனது பணியை எப்படி செய்யப்போகிறார் சென்னை மக்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். குறிப்பாக வடசென்னை பகுதியை சேர்ந்த பிரியா ராஜன் வட சென்னை மக்களுக்காக சென்ன செய்யப்போகிறார் என்று ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.