சுமி நகரில் இருந்து வெளியேற பாதுகாப்பாக வழி ஏற்படுத்தப்படவில்லை: இந்தியா புகார்
உக்ரைனின் சுமி நகரில் இருந்து இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற வழி ஏதும் ஏற்படுத்தப்படவில்லை என்று இந்தியா புகார் அளித்துள்ளது. மக்கள் பாதுகாப்பாக வெளியேற வழி ஏற்படுத்தப்படும் என்ற ரஷ்ய அறிவிப்பு நடைமுறைக்கு வரவில்லை என இந்தியா தெரிவித்துள்ளது. பாதுகாப்பான வழி இல்லாததால் சுமியில் இருந்து இந்திய மாணவர்களால் வெளியேற முடியவில்லை என்று இந்தியா கவலை தெரிவித்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.