சுங்க அதிகாரிக்கு ஜனாதிபதி விருது!!!

சென்னை : சுங்க வரித்துறையில் சிறந்த சேவை ஆற்றியதற்காக, சென்னை சுங்கவரித் துறை உதவி கமிஷனர் ஆனந்த் குமார் சவலம், ஜனாதிபதி விருது பெற்றுள்ளார். இதுவரை, 11 பாராட்டு சான்றிதழ்களை பெற்றுள்ளார். தேசிய சுங்கவரி, மறைமுக வரி மற்றும் போதைப் பொருள் தடுப்பு பயிற்சி மையத்தின் பயிற்சி அதிகாரியாகவும் உள்ளார்.இவரது சேவையை பாராட்டி, சிறந்த சேவைக்கான ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டது.இந்த விருதை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நேற்று முன்தினம் பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில், ஆனந்த் குமார் சவலத்திற்கு வழங்கினார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா