சசிகலாவால் எழுந்துள்ள திடீர் சர்ச்சை: ஓ.பன்னீர்செல்வம்- எடப்பாடி ஆலோசனை…
சசிகலாவை கட்சிக்குள் சேர்ப்பது குறித்த சர்ச்சை பேச்சுக்கு பின்னர் தலைமை கழகத்தில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் சந்தித்து கொண்டது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனால் சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று கூறிய நிர்வாகிகள் மீதும், அவரை சந்தித்த ராஜா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். கட்சி நலனை கருத்தில் கொண்டு எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்தை ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுக்கொண்டு கட்சி கட்டுப்பாடுகளை மீறியவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சம்மதித்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.