கோவை மாநகர போலீசுக்கு மாநிலத்தில் முதலிடம்…

அவசர உதவி கோரும் அழைப்புகளுக்கு விரைந்து சென்று தீர்வு காண்பதில், மாநில அளவில் கோவை மாநகர போலீசார் முதலிடம் பெற்றுள்ளனர்.சாலை விபத்து, குற்றச்சம்பவங்கள் நேரிடும்போதும், அவசர போலீஸ் உதவி தேவைப்படும் மற்ற நேரங்களிலும், போலீஸ் கட்டுப்பாட்டு அறையை, ‘100’ என்ற கட்டணம் இல்லாத போன் எண்ணில் தொடர்பு கொண்டு, பொதுமக்கள் தகவல் தெரிவிக்கின்றனர். இவ்வாறு தகவல் வந்தவுடன், கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்ட போலீஸ் ரோந்து குழுவினர், உடனடியாக சம்பவ இடத்துக்கு புறப்பட்டு விடுவர். போலீசார் எத்தனை விரைவாக சம்பவ இடம் செல்கின்றனர் என்ற விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.மாநில அளவில் சேகரிக்கப்பட்ட இந்த புள்ளி விவர அடிப்படையில், விரைந்து சம்பவ இடம் செல்வதில், கோவை மாநகர போலீசார் முதலிடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. கரூர் போலீஸ் இரண்டாமிடம், துாத்துக்குடி போலீஸ் மூன்றாமிடத்தில் உள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை