4 நாளைக்கு தண்ணீர் வராது; உடனே சேமித்து வையுங்கள்!!!

குடிநீர் வினியோகம் 4 நாட்களுக்கு நிறுத்தப்படுவதால் தேவையான தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்ள பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதே சமயம் அவசர தண்ணீர் தேவைக்கு பொதுமக்கள் தொடர்புகொள்ள வேண்டிய செல்போன் எண்களும் அறிவிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அடுத்த மீஞ்சூர் காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் வருகிற 8ம் தேதி காலை 8 மணி முதல் 11ம் தேதி காலை 11 மணி வரையில், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ்.