உக்ரைனில் இருந்து வெளியேற முயன்றபோது சுடப்பட்ட இந்திய மாணவர் டெல்லிக்கு அழைத்துவரப்படுகிறார்!!

டெல்லியை சேர்ந்தவர் ஹர்ஜோத் சிங். உக்ரைனில் படித்து வருகிறார். கடந்த 27-ந் தேதி, அவர் வேறு 2 இந்தியர்களுடன் காரில் உக்ரைனை விட்டு வெளியேற முயன்றார். அப்போது கார் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில், ஹர்ஜோத் சிங் குண்டு பாய்ந்து காயமடைந்தார். தலைநகர் கீவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில், இந்திய அரசின் ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின்கீழ் ஹர்ஜோத் சிங் இன்று மீட்கப்பட்டு, டெல்லிக்கு அழைத்து வரப்படுகிறார். இத்தகவலை இந்திய உலக கூட்டமைப்பு தலைவர் புனீத்சிங் சந்தோக் தெரிவித்தார்.
“கீவில் குண்டு பாய்ந்து காயம் அடைந்த பாஸ்போர்ட்டை இழந்த இந்தியர் ஹர்ஜோத் சிங்,  எங்களுடன் இந்தியா திரும்புவார்” என்று மத்திய மந்திரி விகே சிங் டுவீட் செய்துள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.