மின் வாரிய அதிகாரி போக்சோவில் கைது!!!
திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு, தீவிர வயிற்று வலி ஏற்பட்டதால், அவரது தாய், சிறுமியை ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு, பரிசோதித்த டாக்டர், சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். திருவொற்றியூர் வடக்கு மாட வீதியை சேர்ந்த ராஜசேகரன் (48) என்பவர், தன்னை வீட்டின் மாடியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினாள். புகாரின் பேரில் திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜசேகரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான ராஜசேகர், சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் உதவி தணிக்கை அலுவலராக வேலை பார்த்து வருவதும், இவருக்கு திருமணமாகி, கல்லூரியில் படித்து வரும் மகனும், 10வது படிக்கும் மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்