மகாராஷ்டிராவில் தியேட்டர்களில் 100 சதவீத அனுமதி!!!

 கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பல மாநிலங்களில் தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. கொரோனா பாதிப்பு குறைந்ததால் இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களை போல் மகாராஷ்டிராவிலும் 100 % பார்வையாளர்களுக்கு தியேட்டர்களில் அனுமதி தர வேண்டும் என பாலிவுட் தியேட்டர் அதிபர்கள் அம்மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மும்பை, புனே, நாக்பூர் உள்பட 14 மாவட்டங்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாலிவுட் தியேட்டர் அதிபர்கள், தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.