புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சியில் முதல் பெண் மேயர் பதவியேற்றார்…

மாநகராட்சியின் முதல் மேயர் பதவி, பட்டியலின பெண்ணிற்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சியின் முதல் மேயராக 32வது வார்டு மாமன்ற உறுப்பினர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் மற்றும் துணை மேயராக 30வது வார்டு மாமன்ற உறுப்பினர் காமராஜ் ஆகியோரை வேட்பாளராக திமுக தலைமை அறிவித்தது. தாம்பரம் மாநகராட்சி முதல் மேயராக அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.  பதவி ஏற்ற பிறகு மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன் பேசுகையில், ‘‘தாம்பரம் மாநகராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், மின்விளக்கு அனைத்தும் நிச்சயமாக செய்து தரப்படும்.   தாம்பரம் மாநகராட்சி சென்னைக்கு நிகரான மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்,’’ என்றார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஹயாத்