தமிழ்நாட்டை உலுக்கிய கோகுல்ராஜ் படுகொலை 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு!!!
கோகுல்ராஜ் ஆணவ படுகொலை வழக்கில் யுவராஜ் உள்பட 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. சேலம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி ஆணவ படுகொலை செய்யப்பட்டார் கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை நடைபெற்று வந்தபோதே 2 பேர் உயிரிழந்தனர். மேலும் கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 5 பேரை விடுவித்து நீதிபதி சம்பத்குமார் தீர்ப்பளித்தார். சங்கர், அருள்செந்தில், செல்வகுமார், தங்கதுரை மற்றும் சுரேஷ் ஹியர் விடுதலை செய்யப்பட்டனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுரேஷ் வாணியம்பாடி.