டேவிஸ் கோப்பை டென்னிஸ்; டென்மார்க்கை வீழ்த்தி இந்தியா அபாரம்!!

இந்திய டென்னிஸ் அணி செப்டம்பரில் நடைபெறும் உலக குரூப்-1 போட்டி தொடரில் பங்கேற்க தகுதி அடைந்தது.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் டென்மார்க்கிற்கு எதிராக 2-0 என்ற புள்ளி கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற இரட்டையர் பிரிவு போட்டியில்,  இந்தியாவின் ரோகண் போபண்ணா-டிவிஜ் சரன் ஜோடி டென்மார்க்கின் பிரெடெரிக் நெய்ல்சந்மிக்கேல் டோர்ப்கார்ட் ஜோடியை அபாரமாக வீழ்த்தினர்.இந்திய இணை 6-7,  6-4,  7-6  என்ற செட் கணக்கில் எதிரணியை தோற்கடித்தனர்.
இதன்மூலம், உலக குரூப்-1 போட்டி தொடரின் பிளே ஆப் போட்டியில் டென்மார்க்கிற்கு எதிராக 3-0 என்ற புள்ளி கணக்கில் இந்தியா வென்றது. மேலும், இந்திய டென்னிஸ் அணி செப்டம்பரில் நடைபெறும் உலக குரூப்-1 போட்டி தொடரில் பங்கேற்க தகுதி அடைந்தது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.