கொசஸ்தலை ஆற்றில் சிறப்பு ஆலோசனை குழு ஆய்வு: கரைகளை பலப்படுத்த முடிவு…
திருவொற்றியூர்: பூண்டி மற்றும் புழல் ஏரிகளின் உபரிநீர் செல்லும் கொசஸ்தலை ஆறு மற்றும் கால்வாயை தமிழக அரசின் சிறப்பு ஆலோசனை குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுக்குழு நேற்று பூண்டி ஏரியில் இருந்து எண்ணூர் வரை செல்லும் கொசஸ்தலை ஆற்றின் கரை மற்றும் புழல் ஏரி உபரிநீர் செல்லக்கூடிய ஆமுல்லைவாயல் மற்றும் இருளர் காலனி கால்வாய் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.ஆய்வின்போது, பொதுப்பணித்துறை மாவட்ட செயற்பொறியாளர் திலகம், உதவி பொறியாளர் சதீஷ்குமார், கமிட்டி உறுப்பினர் பாலாஜி உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுரேஷ் வாணியம்பாடி.