எஸ்-400 பிரச்னையை பயன்படுத்துமா?

விளக்கத்தை ஏற்க மறுப்பு
உக்ரைனில் சிக்கியுள்ள 20 ஆயிரம் இந்திய மாணவர்கள், இந்தியர்களை மீட்கவே,  நடுநிலை வகிப்பதாக இந்தியா கூறி வருகிறது. இதை அமெரிக்கா ஏற்கவில்லை.

எஸ்-400  பிரச்னையை பயன்படுத்துமா?
ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்பை அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி இந்தியா கொள்முதல் செய்கிறது. ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கும் நாடுகளின் மீது அமெரிக்கா தனது உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பொருளாதார தடைகள் விதித்து வருகிறது. தனக்கு தற்போது நெருங்கிய நட்பு நாடாக இந்தியா இருந்து வருவதால், இந்த தடையில் இருந்து விலக்கு அளிப்பது பற்றி பைடன் நிர்வாகம்  பரிசீலித்து வருகிறது. இந்நிலையில், ரஷ்யாவுக்கு ஆதரவாக நடுநிலை வகிக்கும் இந்தியாவை மிரட்ட, இந்த எஸ்-400 விவகாரத்தை அமெரிக்கா ஆயுதமாக பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.