5 மாநிலங்களுக்கு ரூ.1,682 கோடி நிதி: தமிழகத்துக்கு ரூ.352 கோடி
டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் ஆந்திரா, இமாச்சல பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் ரூ.1,682 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக, ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆந்திராவுக்கு ரூ.351.43 கோடி, இமாச்சலப் பிரதேசத்துக்கு ரூ.112.19 கோடி, கர்நாடகா ரூ.492.39 கோடி, மகாராஷ்டிரா ரூ.355.39 கோடி, தமிழ்நாட்டு ரூ.352.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு ரூ.17.86 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது,’ என கூறப்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.