ரஷியாவில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் பல இடங்களில் முடக்கம்
உக்ரைன் மீது ரஷியா கடந்த 24-ந்தேதி தொடங்கிய போர் ஏழு நாட்களை எட்டியது. ஒவ்வொரு நாளும் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது தரை, வான், கடல் என மும்முனை தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது. உலக நாடுகள் தனிமைப்படுத்தினாலும், ரஷியா கண்டுகொள்ளாமல் தனது தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.
இதற்கிடையே உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா நிறுத்த வேண்டும் என்று சமூக வலைதளங்களான பேஸ்புக், யூடியூப், இண்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப் போன்றவைகளில் கருத்துக்களும், எதிர்ப்புக்களும் தொடர்ந்து பரவி வருகிறது.
இந்த நிலையில், ரஷியாவில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் பல இடங்களில் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. உக்ரைன் போருக்கு எதிரான எதிர்ப்புக் கருத்துகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுந்து வருவதால் ரஷியா இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.