மீனாட்சி கோயில் வசந்த உற்ஸவம்…
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோடை கால வசந்த உற்ஸவம் மார்ச் 9 முதல் 17 வரை நடக்கிறது. பங்குனி உத்திரம் சுவாமி புறப்பாடு மார்ச் 18 ல் நடக்கிறது.பங்குனி உத்திரத்தன்று காலை 10:00 மணிக்கு மேல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி செல்லுார் திருவாப்புடையார் கோயிலில் எழுந்தருளுகின்றனர். அங்கு அபிேஷகம், ஆராதனை முடிந்து மாலையில் சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்திலும், அம்மன் மரவர்ண சப்பரத்திலும் எழுந்தருளுகின்றனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.