பீகாரில் பட்டாசு தயாரிக்கும்போது வெடி விபத்து: 7 பேர் உயிரிழப்பு.!
பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள கஜ்வாலிசாக் பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று இரவு வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட போது, திடீரென பட்டாசுகள் வெடித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த வெடிவிபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.