பிள்ளைகள் அனைவரையும் சந்திப்பேன் – சசிகலா !!!!
அதிமுக ஒரே குடும்பம், பிள்ளைகளை நிச்சயம் சந்திப்பேன்’ என சென்னை விமான சசிகலா நிலையத்தில் பேட்டியளித்துள்ளார். சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது, ‘அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒரே குடும்பம். நான் அனைவரையும் ஒரே குடும்பத்துப் பிள்ளைகளாக பார்க்கிறேன். தொடர் தோல்விகளை சந்திப்பதால் அதிமுக தொண்டர்கள் துயரத்தில் உள்ளனர்’ என கூறினார் .2 நாட்கள் சுற்றுப்பயணம் முடிந்து சென்னை திரும்பும் சசிகலா, அதிமுக நிர்வாகிகளை சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.