பாரீஸ் அருங்காட்சியகத்தில் இருந்து புதின் சிலையை தூக்கியெறிந்த நிர்வாகம்..!!

உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்துவதை கண்டித்து பாரிசில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் சிலை அகற்றப்பட்டுள்ளது. உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது 9வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு, விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்குதல், துறைமுகங்கள், ராணுவ நிலைகள் ஆகியவற்றை குறி வைத்து தாக்குதல் என பல்முனை தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இதனால் அந்நாட்டின் பண மதிப்பு 30 சதவீத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்நிலையில், பாரீஸ் அருங்காட்சியகத்தில் இருந்து புதின் சிலையை நிர்வாகம் தூக்கியிருந்துள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் சீன் ஆற்றங்கரையில் உள்ள பிரவீன் அருங்காட்சியகம் 1882ம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு புகழ்பெற்ற தலைவர்கள், ஆளுமைகளின் மெழுகு சிலைகள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் சிலையை அங்கிருந்து அகற்றியுள்ளனர். ஹிட்லர் போன்ற சர்வாதிகாரிகளின் சிலையை காட்சிப்படுத்த விரும்பவில்லை என்றும் அந்த வரிசையில் புதினின் சிலை அகற்றப்பட்டுள்ளதாகவும் அருங்காட்சியக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.