பள்ளி, கல்லூரிகளை திறந்தாலும் கவனம் மிக அவசியம்!!!!
புதுடில்லி : “பள்ளிகள், கல்லுாரிகள், விடுதிகள் ஆகியவற்றை திறக்கலாம். அதேநேரத்தில், நாம் மிகுந்த கவனத்துடனும் இருக்க வேண்டியதும் அவசியம்,” என, ‘நிடி ஆயோக்’ உறுப்பினர் டாக்டர் பால் தெரிவித்துள்ளார். மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதால், கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகின்றன. இந்நிலையில், பள்ளிகள், கல்லுாரிகள், விடுதிகள் உள்ளிட்ட அனைத்தையும் திறப்பதில் எந்த தவறும் இல்லை. அதேநேரத்தில், நாம் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டியது அவசியம்.இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ்.