தொழிற்பேட்டை அமைத்தால் மிகப்பெரிய அளவில் போராட்டம்…

திருப்பூர் மாவட்டம் அவிநாசி சேவூர் அருகே தத்தனூர் பகுதியில் 846 ஏக்கரில் தொழில் பூங்கா அமைக்க கடந்த அ.தி.மு.க., அரசு திட்டமிடப்பட்டது. இதற்காக தத்தனூர், புஞ்சை தாமரைக்குளம், புலிப்பார் என 3 ஊராட்சிகளில் உள்ள பட்டா தரிசு நிலங்கள், புறம்போக்கு நிலங்கள் என 846 ஏக்கர் நிலம் ‘சிப்காட்’ நிறுவனத்துக்கு ஒப்படைக்க நில அளவை பணி முடிந்து முதற்கட்டப்பணி மேற்கொள்ளப்பட்டது. ஆட்சேபனையை மீறி ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைந்தால், அத்திக்கடவு – அவிநாசி போராட்டம் போன்று, மிகப்பெரிய அளவில் எதிர்ப்பை தெரிவிப்பது என விவசாயிகள், விவசாய அமைப்பினரின் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஜஸ்டின்