தமிழகத்தில் கோவிட் பாதிப்பு 292 ஆக குறைவு …

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 292 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டு உள்ளது. 778 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று (மார்ச். 02 ம் தேதி) 320 பேருக்கு கோவிட் பாதிப்பு இருந்த நிலையில் இன்று (மார்ச் 03 ம் தேதி) பாதிப்பு 292 ஆக குறைந்துள்ளது. இன்று கோவிட் உறுதியானவர்களில் 163 பேர் ஆண்கள், 129 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 20,13,826 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 14,36,469 ஆகவும் அதிகரித்து உள்ளது. 778 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,08,373 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.