கேரளாவில் ரூ.25 கோடி போதை பொருள் பறிமுதல்
திருவனந்தபுரம்: ஆந்திரா, கர்நாடகா உள்பட பல மாநிலங்களில் இருந்து திருச்சூர் வழியாக, கேரளாவுக்கு அதிக அளவில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக திருச்சூர் மாவட்ட எஸ்பி ஐஸ்வர்யா டோங்ரேவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் தனிப்படையினர் முரிங்கூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார், வேனை நிறுத்தி போலீசார் பரிசோதனை செய்தனர்.
அப்போது வேனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.25 கோடி மதிப்பிலான 12 கிலோ போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து வாகனங்களில் வந்த திருச்சூர், பத்தனம்திட்டாவை சேர்ந்த லிஷன் (35), அனூப் (32), நாசிம் (32) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் ஆந்திராவில் இருந்து கடத்திக் வரப்பட்டது தெரியவந்தது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.