உத்தர பிரதேசத்தில் 6வது கட்ட தேர்தல் 54% வாக்குப்பதிவு!!
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு நேற்று நடந்த 6ம் கட்ட தேர்தலில் 54 சதவீத வாக்குகள் பதிவானது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட 57 தொகுதிகளுக்கு 6ம் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. முதல்வர் யோகி ஆதித்யநாத் போட்டியிடும் கோரக்பூர், மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லு போட்டியிடும் தம்குஹி ராஜ் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்தது.
முதல்வர் யோகி ஆதித்யநாத், வாக்குச்சாவடிக்கு வந்து நேற்று தனது தொகுதியில் வாக்களித்தார். கடந்த 2017ம் ஆண்டு நடந்த தேர்தலில், இந்த 57 தொகுதிகளில் 46 இடங்களை பாஜ கைப்பற்றியது. 6ம் கட்ட தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 54 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.