ஆஸ்திரேலியாவில் பலத்த மழை- வெள்ளத்தில் மிதக்கும் நகரங்கள்!!!
ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இடைவிடாமல் கொட்டி தீர்க்கும் இந்த மழையால் விஸ்மோல் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. எங்கு பார்த்தாலும் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது.
பல்வேறு நகரங்களில் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல ஊர்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்த மழைக்கு இதுவரை 13 பேர் பலியாகி உள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.