ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது தொடர்பான விசாரணை!

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது தொடர்பான வழக்கு மார்ச் 15-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை என தகவல் வெளியாகியுள்ளது. ஆலையை திறக்கவும், பராமரிப்பு பணிகளுக்காகவும் அனுமதி கோரிய வழக்கை விரைவாக விசாரிக்க வேந்தாந்தா நிறுவனம் கோரிக்கை வைத்து இருந்தது. வழக்கை மார்ச் 15-ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்வதாக நீதிபதி சந்திரசூட் அறிவித்துள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.