வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது உயிரிழந்த இளைஞர்!
கோவை வெள்ளியங்கிரி மலை மகா சிவராத்திரி விழாவில் கலந்துக்கொள்ளச் மலையேற்றத்தில் ஈடுபட்ட 24 வயது இளைஞர் பழனிவேல் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகா சிவராத்திரி விழாவுக்கு பாதையாத்திரை சென்ற போது நேர்ந்த சோகம். மலையேற்றத்திற்கு திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பழனிவேல்(24) என்பவர் தனது நண்பர்களுடன் சென்றிருந்தார். மூன்றாவது மலையில் நடந்து சென்ற போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. நண்பர்கள் சுதாரிப்பதற்குள் அவர் மயங்கி கீழே விழுந்து நொடிப்பொழுதில் உயிரிழந்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.