விராட் கோலிக்கு இன்னொரு சிறப்பான சாதனை: பும்ரா பேட்டி

100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது என்பது உண்மையிலேயே ஒரு வீரருக்கு சிறப்பு வாய்ந்த சாதனையாகும். இது அவரது கடின உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் கிடைத்த சான்று. அவருக்கு இது இன்னொரு பெருமைப்படத்தக்க சாதனையாகும். விராட் கோலி இந்திய அணியின் வெற்றிக்காக ஏராளமான பங்களிப்பை அளித்திருக்கிறார். வருங்காலத்தில் இன்னும் நிறைய பங்களிப்பார். அவருக்கு வாழ்த்துகள். அவருக்கு ஏதாவது பரிசு அளிக்க விரும்புகிறீர்களா என்று கேட்கிறீர்கள். இந்திய அணி வெற்றி பெற்றால் அதை விட அவருக்கு பெரிய பரிசு எதுவும் இருக்க முடியாது. அதே சமயம் ஒரு கிரிக்கெட் வீரராக தனது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புவார். இவ்வாறு பும்ரா கூறினார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.