‘மாஜி’ அமைச்சர் கூட்டாளி வீட்டில் கைவரிசை!!!

திருவள்ளூர்:அதிகாலையில் அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள், வருமான வரித்துறை அதிகாரிகள் போல நடித்து, 117 சவரன் நகைகள், 2 லட்சம் ரூபாய் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்களை அபகரித்து சென்ற சம்பவம் நடந்துள்ளது. பாலமுருகன், 38; அரசு ஒப்பந்ததாரர். இவர், செங்கல் வர்த்தகத்திலும் ஈடுபட்டு வருகிறார்; சமீபத்தில் செங்கல் சூளை வாங்கி உள்ளீர்கள். எந்த வருமானத்தில் வாங்கினீர்கள்? அதற்கான ஆவணங்களை தாருங்கள்’ என பாலமுருகனிடம் கேட்டனர்.பின், ‘வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளீர்கள்; அதற்கெல்லாம் வருமான வரி செலுத்தி உள்ளீர்களா? வீட்டில் உள்ள நகை, பணத்தை எடுத்து வாருங்கள்’ என்றனர்.பாலமுருகன், முன்னாள் அமைச்சர் பெஞ்சமினுக்கு வேண்டிய நபர் என கூறப்படுகிறது. இருவரின் மனைவியும் தோழியர்; அந்த வகையில் அமைச்சராக இருந்த போது, பெஞ்சமின் சிபாரிசில், சாலை சீரமைப்பு பணிகள், ஏரிகளில் மணல் அள்ளுதல் என பல்வேறு பணிகளை பாலமுருகன் செய்து வந்ததாக கூறப்படுகிறது. மர்ம நபர்கள் குறித்து, போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை