மணிப்பூரை காங்கிரஸ் கட்சி பிளவுபடுத்த முயன்றது – பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம்
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்கட்ட சட்டசபை தேர்தல், நேற்று முன்தினம் நடந்தது. 2-வது கட்ட தேர்தல், வருகிற 5-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி, பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அவர் பேசியதாவது:-
காங்கிரஸ் கட்சியின் முக்கிய நோக்கம், வளர்ச்சி அல்ல. மணிப்பூரை கொள்ளையடிப்பதுதான். மக்களின் முக்கிய பிரச்சினைகளை காங்கிரஸ் அலட்சியம் செய்தது.
மலைப்பகுதி, பள்ளத்தாக்கு பகுதி என்று அக்கட்சி மக்களை பிளவுபடுத்த முயன்றது. பல ஆண்டுகளாக மணிப்பூரில் கிளர்ச்சி நீடிக்க செய்தது. காங்கிரசிடம் உஷாராக இருக்க வேண்டும். அக்கட்சி மீண்டும் ஆள வாய்ப்பு அளித்துவிடக்கூடாது.
மத்தியிலும், மணிப்பூரிலும் 5 ஆண்டுகளாக நடந்த இரட்டை என்ஜின் அரசு, மணிப்பூரில் அமைதி திரும்ப செய்தது. மாநிலத்தில் சமச்சீரான வளர்ச்சி ஏற்பட பா.ஜனதா உயர் முன்னுரிமை அளிக்கிறது. பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டப்படும். ரூ.100 கோடியில் ‘ஸ்டார்ட்அப்’ நிதியம் உருவாக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.