தி.மு.க.,வுக்கு தாவிய தே.மு.தி.க., கவுன்சிலர்கள்!!!

மறைமலை நகர்: காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலை நகர் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில், தே.மு.தி.க., ஏழு இடங்களில் போட்டியிட்டு, இரு இடங்களை கைப்பற்றியது. வெற்றி பெற்ற 6 மற்றும் 7வது வார்டு கவுன்சிலர்களான தேவி மற்றும் காயத்ரி ஆகியோர், அக்கட்சியில் இருந்து விலகி, சிறு, குறு, நடுத்தர தொழில்துறை அமைச்சர் அன்பரசனை, அவரது இல்லத்தில், நேற்று முன்தினம் மாலை சந்தித்து, தி.மு.க.,வில் இணைந்தனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.