தமிழகத்தில் ஜூன் 20-ந்தேதி பள்ளிகள் திறப்பு…

அடுத்தவர்கள் திருப்திக்காக தேர்வு எழுதுவதை காட்டிலும் நான் படிச்சி நான் தேர்வு எழுத இருக்கிறேன் என்ற அளவுக்கு மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 10, 11, 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:- தேர்வுகள் முடிந்தபிறகு 2022-2023 பள்ளி கல்வி ஆண்டுக்காக 1 முதல் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான வழக்கமான வகுப்புகள் 20.6.22 முதல் தொடங்கும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.