சிரஞ்சீவி பட பர்ஸ்ட் லுக் ரிலீஸ்
ஐதராபாத்: சிரஞ்சீவி நடிக்கும் ‘போலா சங்கர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. ஆச்சார்யா படத்தில் நடித்து முடித்துவிட்டார் சிரஞ்சீவி. இதையடுத்து லூசிபர் மலையாள படத்தின் ரீமேக்கான காட்பாதர் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இதில் நடித்தபடியே ‘போலா சங்கர்’ படத்திலும் நடித்து வந்தார். இது தமிழில் வெளியான வேதாளம் படத்தின் ரீமேக் ஆகும். அஜித் வேடத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். லட்சுமிமேனன் நடித்த தங்கை வேடத்தில் கீர்த்தி சுரேஷும் ஸ்ருதிஹாசன் நடித்த ஹீரோயின் வேடத்தில் தமன்னாவும் நடிக்கிறார்கள்.
இந்த படத்துக்கு மஹதி ஸ்வராசாகர் இசையமைக்கிறார். மெஹர் ரமேஷ் இயக்குகிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோ க்ளிப் நேற்று வெளியிடப்பட்டது. இதில் ஸ்டைலான காட்சியில் சிரஞ்சீவி தோன்றுவது போன்ற வீடியோ வெளியானது.
இந்த வருடத்திலே சிரஞ்சீவியின் 3 படங்களும் அடுத்தடுத்து வெளியாகும் என கூறப்படுகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.