சார்லி சாப்ளினை போல் புகழ்பெற்ற பஸ்டர் கீட்டனின் வாழ்க்கை படமாகிறது!

லாஸ்ஏஞ்சல்ஸ்: மறைந்த நகைச்சுவை நடிகர் பஸ்டர் கீட்டனின் வாழ்க்கையை ஹாலிவுட்டில் படமாக உருவாக்க உள்ளனர். இந்த படத்தை ஜேம்ஸ் மேங்கோல்ட் இயக்குகிறார். இவர், 2019ம் ஆண்டு வெளியான ஃபோர்டு வெர்சஸ் ஃபெராரி என்ற படத்தை இயக்கியவர். ஃபோர்ட் நிறுவனத்துக்கும் ஃபெராரி நிறுவனத்துக்கும் இடையே நடந்த மோதலை பற்றிய படமிது. இந்த படம் 2 ஆஸ்கர் விருதுகளை வென்றது. இப்போது இண்டியானா ஜோன்ஸ் 5 படத்தை இயக்கி வரும் ஜேம்ஸ் மேங்கோல்ட், அடுத்ததாக காமெடி நடிகர் பஸ்டர் கீட்டனின் வாழ்க்கையை தழுவி படம் இயக்க உள்ளார். சார்லி சாப்ளினுக்கு அடுத்தபடியாக மிகவும் புகழ் பெற்றவர் பஸ்டர் கீட்டன். 1930, 40களில் காமெடி நடிகராகவும் இயக்குனராகவும் புகழ்பெற்று பிரபலமாக இருந்தார். மவுன படங்களில் கூட பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அசத்தியவர். இவரது வாழ்க்கையை பற்றி எழுதப்பட்ட ‘பஸ்டர் கீட்டன் கட் டு தி சேஸ்’ புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் தயாராக இருக்கிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.