கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுட்ட மூதாட்டி…
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவ பக்தர்களுடன் இணைந்து மூதாட்டி ஒருவர் கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் வடை சுட்டு வருகிறார். மகாசிவராத்திரி அன்று முத்தம்மாள் என்ற மூதாட்டி கடந்த 48 ஆண்டுகளாக அப்பம் சுட்டு வருகிறார். இதற்காக 40 நாட்களாக விரதம் இருந்து அப்பம் சுட்டு வருகிறார். மூதாட்டியின் சிவ பக்தியை கண்டு சுற்றுப்பகுதி மக்கள் மெய்சிலிர்த்து வருகிறனர். மகா சிவராத்தியை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவ பக்தர்கள் பரவசம்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.