கோவையில் புதிய மேயராக யாருக்கு வாய்ப்பு???

ஐந்தாண்டுகளுக்குப் பின், கோவையின் புதிய மேயராகப் போகிறவர் யார் என்பது நாளை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேயர் பதவியேற்பு விழாவில், முதல்வர் பங்கேற்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் மேயர் தேர்வு நடக்கவுள்ளது. கோவையில் தி.மு.க., அசுர பலத்துடன் இருப்பதால், கட்சித்தலைமை அறிவிக்கும் மேயருக்கு எதிராக, யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பில்லை. புதிய மேயர் போட்டியின்றித் தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்