கெர்சன் நகரை முழுமையாக கைப்பற்றியதாக ரஷ்ய ராணுவம் அறிவிப்பு!!!

 உக்ரைனின் கெர்சன் நகரை முழுமையாக கைப்பற்றியதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 7-வது நாளாக நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது.

உக்ரைனின் கெர்சன் நகரை முழுமையாக கைப்பற்றியதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. கப்பல் காட்டும் தொழிற்சாலைகள், துறைமுகங்கள் நிறைந்த கெர்சன், உக்ரைனின் முக்கிய நகரமாகும். சுமார் 3 லட்சம் மக்கள் தொகையுடைய கெர்சன் நகரில் 20% பேர் ரஷ்ய நாட்டினர் வசித்து வருகின்றனர். உக்ரைனுடனான 2-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று தொடங்க உள்ளபோதும் கூட ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.