உக்ரைனுக்கு போர் விமானங்களை போலந்து அனுப்பாது..! அதிபர் துடா அறிவிப்பு

உக்ரைனுக்கு ஆதரவாக, 50 கோடி டாலர் மதிப்புள்ள போர் விமானங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றை அனுப்பி வைக்க ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கடந்த 27-ந் தேதி முடிவு செய்தனர்.

இந்தநிலையில், ‘நேட்டோ’ அமைப்பில் இடம்பெற்றுள்ள ஐரோப்பிய நாடான போலந்து, உக்ரைனுக்கு போர் விமானத்தை அனுப்ப மாட்டோம் என்று கூறியுள்ளது. இதுகுறித்து போலந்து அதிபர் அன்ட்ரெஜ் துடா கூறியதாவது:-

ரஷியா-உக்ரைன் போரில் போலந்து இணையவில்லை. ‘நேட்டோ’ அமைப்புக்கும் இதில் சம்பந்தம் இல்லை. உக்ரைனுக்கு நாங்கள் மனிதாபிமான உதவி அளித்து வருகிறோம். இருப்பினும், போர் விமானங்களை அனுப்ப மாட்டோம். அப்படி அனுப்புவது போரில் தலையிடுவதாக அர்த்தம் ஆகிவிடும் என்று அவர் கூறினார்.

பேட்டியின்போது, ‘நேட்டோ’ பொதுச்செயலாளர் உடன் இருந்தார். உக்ரைன் நிலவரம் குறித்து விவாதிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை இன்று போலந்து அதிபர் நடத்துகிறார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.